தமிழ் நாட்டில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பாமக கட்சியில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் தே.ஜ.கூட்டணியில் அன்புமணி ராமதாஸ் இணைந்தார். இதனை தொடர்ந்து ராமதாஸ் தரப்பு வேறு யாருடனாவது கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்குமா அல்லது தனித்து களம் காணுமா என்ற கேள்வி எழுந்து வந்தது.
இந்த நிலையில் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை அபுதமமுக பொதுச் செயலாளர் சசிகலா சந்தித்தார். இச்சந்திப்பில் வரும் சட்டமன்ற தேர்தலில் பாமக மற்றும் அபுதமமுக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த கூட்டணி பேச்சு வார்த்தையில் 234 தொகுதிகளிலும் இருவரும் சேர்ந்து போட்டியிடுவதாக தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியார்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது ; எங்கள் கூட்டணி தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றியையும் தாக்கத்தையும் ஏற்படுத்தும். எங்கள் கூட்டணி பல பேருக்கு நடுக்கத்தை உண்டாக்கியுள்ளது கூட்டணிக்கு நானே தலைமை, நானே முதல்வர் வேட்பாளர், 234 தொகுதிகளிலும் நாங்கள் போட்டியிடுகிறோம். ஒத்த கருத்துடைய கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணையலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.







