திருத்தணியில் போலி மருத்துவர் உள்பட 2 பேர் கைது

+2 முடித்து விட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த நண்பர் இருவரையும் போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் போலி மருத்துவமனை இயங்கி வருதாக மாவட்ட…

+2 முடித்து விட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த நண்பர் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் போலி மருத்துவமனை இயங்கி வருதாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில், திருவள்ளூர் மாவட்ட இணை இயக்குனர் தலைமையில் மருத்துவ அதிகாரிகள் மற்றும் திருத்தணி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் லட்சுமி நரசிம்மன் ஆகியோர் போலியாக செயல்பட்டு வந்த மருத்துவமனையை சோதனையிட்டனர்.

சோதனையில், போலி மருத்துவமனையில் மருத்துவம் பார்த்து வந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இருவரும் போலி மருத்துவர்கள் என்று தெரியவந்தது. பிறகு அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த ரூ2 லட்சம் மதிப்புடைய ஆங்கில மருந்துகளை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பு கூறியதாவது, காஞ்சிபுரத்தை சேர்ந்த பூபாலன் என்பவர் +2 முடித்து விட்டு அதே பகுதியில் பட்டுப் புடவைகள் மற்றும் புடவை வியாபாரம் செய்து வந்துள்ளார். அந்த வேலையில் சரியான வருமானம் இல்லாததால் போலி மருத்துவராக உருவெடுத்ததும், இவருக்கு சொந்தமாக மத்தூர் பகுதியில் ஆங்கில மருந்து கடை இருந்து வந்துள்ளதும் தெரியவந்தது என்று தெரிவித்தனர்.

மேலும், அந்த போலி மருத்துவமனையில் அவருக்கு உதவியாக இருந்த அவரது நண்பர் பூபாலன் மீது போலி மருத்துவம் பார்த்த குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்து கைது செய்ததோடு அந்த மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இச்சம்பவம் குறித்து திருத்தணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.