தமிழக அரசு எழுத்தாளர்களுக்கு மிகப் பெரிய மரியாதையை வழங்கி வருகிறது – கனிமொழி எம்.பி

தமிழக அரசு எழுத்தாளர்களுக்கு மிகப் பெரிய மரியாதையை வழங்கி வருகிறது என்று திமுகவின் மகளிரணி செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சுமார் ரூ.1.5 கோடி…

தமிழக அரசு எழுத்தாளர்களுக்கு மிகப் பெரிய மரியாதையை வழங்கி வருகிறது என்று திமுகவின் மகளிரணி செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சுமார்
ரூ.1.5 கோடி செலவில் மறைந்த கரிசல் எழுத்தாளர் கி.ரா.வுக்கு நினைவரங்கம்,
நூலகம் மற்றும் அவரது சிலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிகளை கனிமொழி எம்.பி பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகள் குறித்து பொதுப்பணித்துறை
அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அவருடன் அமைச்சர் பெ.கீதாஜீவன்,
உடன் இருந்தனர்.

பின்னர் கனிமொழி எம்பி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எழுத்தாளர்களுக்கு ராயல்ட்டியை பதிப்பகங்கள் தான் தருவது வழக்கம். மற்ற
மாநிலங்களில் எப்படி என்பது தெரியவில்லை. தமிழக அரசு எழுத்தாளர்களுக்கு
மிகப்பெரிய மரியாதையை வழங்கி வருகிறது. சாகித்திய அகாடமி உள்ளிட்ட விருதுகள்
வாங்கிய எழுத்தாளர்களுக்கு வீடுகள் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர்
அறிவித்துள்ளார். எழுத்தாளர்களுக்கும் தமிழுக்கும் பல்வேறு திட்டங்களை தினமும்
அரசு அறிவித்து கொண்டுள்ளது.

ராகுல் காந்தியின் நடைபயணம் காங்கிரஸுக்கு பலமாக இருக்கும். அதற்காகத்தான்
அவர் நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார் என்றார் கனிமொழி.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.