சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை  – ரூ 2.26 லட்சம் பறிமுதல்

மதுராந்தகம் சார்பதிவுத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் கணக்கில் வராத 2.26 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இயங்கி வரும் பத்திர பதிவுத்துறை அலுவலகத்தில் மாவட்ட…

மதுராந்தகம் சார்பதிவுத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் கணக்கில் வராத 2.26 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இயங்கி வரும் பத்திர பதிவுத்துறை
அலுவலகத்தில் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை DSP இமானுவேல் ஞானசேகர் தலைமையில் ஏழு பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையானது இரவு 7.30 மணி அளவில் தொடங்கி  சுமார் 4 மணி நேரம் சோதனை நடைபெற்றது.இந்த அலுவலகத்தில் இன்று ஒரே நாளில் வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளைச் சார்ந்த 23 திருமணப் பதிவுகள்  நடத்தப்பட்டுள்ளனர். இந்த அலுவலகத்தில் திருமணத்திற்காக  அதிக அளவில் லஞ்சம் பெறுவதாக வந்த புகாரின் பேரில் காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் இன்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது. நடத்திய சோதனையில் சந்திரகுமார்  என்ற அதிகாரி லஞ்சம் பெறுவதாகத்  தெரியவந்த நிலையில்  அவரிடம் சோதனை   நடத்தியதில் அவர்களிடம் இருந்து கணக்கில் வராத 2.26 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களிடம் உரிய விசாரணை நடத்தப்பட்ட உள்ளது . இது சம்பந்தமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . மேலும் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.