தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்ட மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 2014 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட மின் கட்டணம் அமலில் இருந்த நிலையில், 2022 – 2027 வரைக்கான திருத்த மின் கட்டணத்தை நிர்ணயம் செய்து ஜூலை 18 ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதுகுறித்து கோவை, மதுரை, சென்னையிலும் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடைபெற்றது.
இந்நிலையில், மின்கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. அதுதொடர்பாக 965 பக்கங்கள் கொண்ட தகவல் திரட்டையும் வெளியிட்டுள்ளதுடன், மின்கட்டண உயர்வு குறித்து எதிர்ப்பு மற்றும் சந்தேகங்களை தெரிவித்தவர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதுடன், அதற்கான விளக்கங்களும் அளிக்கப்பட்டுள்ளது. மின் உற்பத்தி நிறுவனங்களின் திறன், கடந்த கால செயல்பாடு, நிதி நிலைமை உள்ளிட்ட பல்வேறு தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளது.
2014க்குப் பிறகு உயர்த்தப்படும் மின்கட்டண உயர்வு குறித்து எதிர்ப்பு, கருத்துக்கள் தெரிவித்தவர்கள் முழு விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. மின்கட்டண உயர்வு தொடர்பான சந்தேகங்களுக்கான விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.








