ராகவா லாரன்ஸ் நடிக்கும் ”சந்திரமுகி 2” படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 2005ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. மலையாளத் திரைப்படமான மணிச்சித்திரதாழ் திரைப்படத்தின் மறுஆக்கமாக உருவான சந்திரமுகி திரைப்படம் 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி பெரும் வெற்றி பெற்றதோடு வசூலையும் அள்ளி குவித்தது.இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். மேலும் வடிவேலு, கங்கனா ரணாவத் ராதிகா, வடிவேலு, லக்ஷ்மி மேனன், சிஷ்டி டாங்கே, ரவிமரியா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி நடைபெற்றது. இந்த படத்தில் மொத்தம் 10 பாடல்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. சந்திரமுகி 2 படத்தின் டிரைலர் வெளியீடு பற்றி ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர்.
படம் வரும் செப்.28ஆம் நாள் வெளியாக உள்ளது. அதனால் படத்தை புரமோஷன் செய்யும் பணியில் படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் சந்திரமுகி-2 படத்தின் 2வது டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ட்ரைலர் தற்போது வைரலாகி வருகிறது.