4000 திரையரங்குகளில் ரூ.99 டிக்கெட் கட்டணம்: தேசிய சினிமா தினத்தை முன்னிட்டு மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் அறிவிப்பு..

தேசிய சினிமா தினத்தை அக்.13-ம் தேதி கொண்டாடுவதால், நாடு முழுவதும் சுமார் 4,000-க்கும் மேற்பட்ட திரைகளில் டிக்கெட் கட்டணம் ரூ.99 என மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது குடும்பத்துடன் ஒரு படம் பார்க்க…

தேசிய சினிமா தினத்தை அக்.13-ம் தேதி கொண்டாடுவதால், நாடு முழுவதும் சுமார் 4,000-க்கும் மேற்பட்ட திரைகளில் டிக்கெட் கட்டணம் ரூ.99 என மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது

குடும்பத்துடன் ஒரு படம் பார்க்க வேண்டும் என்றாலே குறைந்தது 1,000 ரூபாய் செலவாகிறது. இதனால், திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்ப்பது என்பது தற்போது மிகவும் யோசனைக்குரியதாக மாறிவிட்டது. சமீபத்தில் தெலுங்கு ரசிகர்கள் திரையரங்குகளுக்குச் சென்று வருவது மிகவும் குறைந்துவிட்டதற்கு ஒரு காரணமாக டிக்கெட் விலையும் கூறப்பட்டது. இதனால், ஓடிடியிலேயே படம் பார்க்க பெரும்பாலானோர் விரும்புவதாகக் கூறப்படுகிறது.

இந்தியா முழுவதும் உள்ள பிவிஆர், ஐநாக்ஸ், சினிபோலிஸ், மிராஜ், சிட்டிபிரைட், ஆசியன், முக்தா ஏ2, மூவி டைம், வேவ், எம்2கே, டிலைட் போன்ற பிரபலமான மல்டிபிளக்ஸ் திரையங்குகளில் இந்தக் கட்டணக் குறைப்பு இருக்கும். திரையரங்குகளுக்குப் பார்வையாளர்களை அதிகம் இழுக்கும் வகையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணக் குறைப்பு, 4டிஎக்ஸ், ஐமேக்ஸ் திரையரங்கங்களுக்குப் பொருந்தாது.

https://twitter.com/MAofIndia/status/1704701254398783937

இத்தகவலை அந்த அசோசியேஷன் தங்கள் அதிகாரப்பூர்வ எக்ஸ்தளத்தில் வெளியிட்டுள்ளது. “அக்.13-ம் தேதி தேசிய சினிமா தினம். நம்பமுடியாத சினிமா அனுபவத்தைப்பெற இந்தியா முழுவதும் உள்ள4000-க்கும் அதிகமான திரைகளில்ரூ.99 கட்டணத்தில் உங்களுக்குப் பிடித்த திரைப்படங்களைக் கண்டு ரசிக்கலாம்” என்று தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு, செப். 16-ல் தேசிய சினிமா தினம் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.