முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

தமிழ்நாட்டில் புதிதாக 1,551 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் புதிதாக 1,551 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 641 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,551 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கொரோனாவால் 26 லட்சத்து 10 ஆயிரத்து 229 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றில் இருந்து ஒரே நாளில் ஆயிரத்து 768 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 25 லட்சத்து 57 ஆயிரத்து 884 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்து 856 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் புதிதாக 182 பேருக்குத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 203 பேர், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கோவையில் கடந்த 24 மணி நேரத்தில் 230 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 122 பேருக்கும் ஈரோட்டில் 115 பேருக்கு புதிதாகத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

மும்பை ரயில் நிலையத்தில் குவிந்த புலம்பெயர் தொழிலாளர்கள்!

Halley karthi

மேகதாதுவில் அணை கட்டுவோம் என்பது உச்சநீதிமன்ற தீர்ப்பை புறக்கணிப்பது போன்றது: துரைமுருகன்

Ezhilarasan

தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறேன்: டிடிவி தினகரன்

Jayapriya