முக்கியச் செய்திகள் இந்தியா

நடுவானில் மாரடைப்பு ஏற்பட்ட விமானிக்கு வென்டிலேட்டர் சிகிச்சை

நடுவானில் மாரடைப்பு ஏற்பட்டதால், நாக்பூரில் தரையிறக்கப்பட்ட வங்கதேச விமானத்தின் விமானிக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வங்கதேச விமானம் ஒன்று மஸ்கட்டில் இருந்து டாக்காவுக்கு நேற்று சென்றுகொண்டிருந் தது. அதில் 126 பயணிகள் இருந்தனர். விமானம் இந்திய எல்லைக்குள் வந்தபோது விமானிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதனால், மற்றொரு விமானி கொல்கத்தா விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து தரையிறக்க அனுமதி கோரினார். ஆனால் விமானம் ராய்ப்பூர் அருகில் இருப்பதால் நாக்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும்படி கேட்டுக்கொள்ளப் பட்டது.

கொல்கத்தாவில் இருந்து நாக்பூர் விமான கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டது. இதையடுத்து நாக்பூர் விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறக்கப்பட்டது. விமானி, ஆம்புலன்ஸ் மூலம் நாக்பூர் கிங்ஸ்வே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டார். பின்னர் 11 மணி நேரத்துக்குப் பிறகு அந்த விமானம் டாக்கா சென்றடைந்தது.

இதற்கிடையே நாக்பூர் மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த விமானி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல் நிலை மிகவும் மோசமாக இருப் பதாகக் கூறப்படுகிறது. அவருக்கு வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவ தாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

முன்விரோதம் காரணமாக மீனவர் கொலை செய்து புதைப்பு

Saravana Kumar

செப்டம்பர் 12ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் – மத்திய கல்வி அமைச்சர்

Jeba Arul Robinson

சிறிய காடாக மாறிய வீடு; பூந்தொட்டிகள் ஆன தேங்காய் மட்டைகள்; கவனத்தை ஈர்க்கும் போபால் பெண்!

Jayapriya