மேலூர் அருகே 1,600 கிலோ ரேசன் அரிசியை உணவுபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் ரேசன் அரிசிகள் கடத்தப்படுவதாக மதுரை உணவுபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி மதுரை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மேலூர் அருகே நாகப்பன்பட்டியில் விசாரணை நடத்தினர். அப்போது அங்கு சந்திரன் என்பவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த மூடைகளில் ரேசன் அரிசி இருப்பதை கண்டறிந்த போலீசார் 40 மூடைகளில் பதுக்கி வைத்திருந்த 1,600 கிலோ ரேசன் அரிசியினை பறிமுதல் செய்தனர்.
மேலும் சந்திரனை கைது செய்த போலீசார், உணவகங்கள் மற்றும் மாட்டு தீவணங்களுக்காக அரிசியை விற்றதும் தெரியவந்தது. மேலும் அரிசியை பதுக்கி வைத்து விற்றது தொடர்பாக யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.








