முக்கியச் செய்திகள் இந்தியா விளையாட்டு

15 ஆண்டுகள்… இறுதிப்போட்டியில் மீண்டும் பாகிஸ்தானை சந்திக்குமா இந்தியா?

டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி, 15 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப் போட்டியில் மீண்டும் பாகிஸ்தானுடன் இந்திய அணி மோதுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 லீக் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்ததை அடுத்து, நேற்றைய தினம் நடைபெற்ற முதலாவது அரை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்து அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் இன்று அடிலெய்டு மைதானத்தில் நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதி போட்டியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. புள்ளிப்பட்டியலில், குரூப் 2-ல் இடம்பெற்ற இந்திய அணி 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தது. குரூப் 1ல் இடம்பெற்ற இங்கிலாந்து அணி, 7 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்தது.

எனவே இன்று நடைபெறும் அரையிறுதி போட்டியில் யார் வெற்றி பெறுவார்களோ அவர்களே, வரும் 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்வர். குறிப்பாக இன்று 35 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியா இங்கிலாந்து அணிகள் உலகக்கோப்பை நாக் அவுட் சுற்றில் மோதுகின்றன. இதற்கு முன்பாக 1987 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின. அந்த போட்டியில் இங்கிலாந்து அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை உலக கோப்பை தொடரில் இரு அணிகளும் மூன்று போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் இந்திய அணி 2 வெற்றியும் இங்கிலாந்து அணி ஒரு வெற்றியும் பெற்றுள்ளது. அரையிறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று பாகிஸ்தான் அணியுடன் மோதும் என ரசிகர்கள் எதிர்பார்க்கும் நிலையில், அதனை முறியடித்து காட்டுவோம் என இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர் சவால் விடுத்துள்ளார். ஆகவே இன்றைய போட்டி, ரசிகர்களின் எதிர்பார்ப்பினை அடுத்தகட்ட நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளது.

– நாகராஜன் 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

75 ஆண்டுகால திருமண பந்தம்: நெட்டிசன்களை கவர்ந்த 101-வயது தம்பதியின் திருமணம்

Web Editor

வாக்களிக்கும்போது முககவசம் கட்டாயம்: ராதாகிருஷ்ணன்!

குவைத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர் உடலை தாயகம் கொண்டு வர வேண்டும் – வைகோ வலியுறுத்தல்

Web Editor