பயங்கரவாதிகள் பயன்படுத்திய 14 மொபைல் மெசஞ்சர் செயலிகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி

ஜம்மு காஷ்மீருக்கு தகவல் அனுப்ப, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் பயன்படுத்திய 14 மொபைல் மெசஞ்சர் செயலிகளை மத்திய அரசு முடக்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. 2019-ம் ஆண்டு, ஆகஸ்ட்…

ஜம்மு காஷ்மீருக்கு தகவல் அனுப்ப, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் பயன்படுத்திய 14 மொபைல் மெசஞ்சர் செயலிகளை மத்திய அரசு முடக்கியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. 2019-ம் ஆண்டு, ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370 மத்திய பா.ஜ.க அரசால் நீக்கப்பட்டது. அதன் பிறகு, அங்கு பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் குறைந்துவிட்டதாக மத்திய அரசு தொடர்ந்து கூறிவருகிறது.

இருந்தும், கடந்த 4 ஆண்டுகளில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் 100-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப்படையினரும், 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் உயிரிழந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளிடம் இருந்து தகவல்களைப் பெற 14 மொபைல் மெசஞ்சர் செயலிகளை பயன்படுத்தியதாக தெரிகிறது. இந்த செயலிகளை காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் தங்கள் ஆதரவாளர்களுடன் (OGW) தொடர்புகொள்வதற்கு பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, பயங்கரவாதிகள் பயன்படுத்தியதாக கூறப்பட்ட Crypviser, Enigma, Safeswiss, Wickrme, Mediafire, Briar, BChat, Nandbox, Conion, IMO, Element, Second line, Zangi, Threema உள்ளிட்ட  செயலிகளை தற்போது மத்திய அரசு முடக்கியுள்ளதாக சில ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.