4 தலைமுறைகளுடன் 101-வது பிறந்தநாளை கொண்டாடிய முதியவர்!

கும்பகோணத்தில் நான்கு தலைமுறையினருடன் முதியவர் 101-வது பிறந்தநாளை கொண்டாடினார். கும்பகோணம் , கொட்டையூர் பகுதியைச் சேர்நதவர் கோவிந்தராஜன். இவரது பூர்வீகம் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள திருவாலங்காடு. இவர் 1923 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ம்…

கும்பகோணத்தில் நான்கு தலைமுறையினருடன் முதியவர் 101-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

கும்பகோணம் , கொட்டையூர் பகுதியைச் சேர்நதவர் கோவிந்தராஜன். இவரது பூர்வீகம் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள திருவாலங்காடு. இவர் 1923 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ம் தேதி பிறந்தவர்.

இவரது மகன், மகள்கள், தம்பி, தங்கை, பேர குழந்தைகள் என நான்கு தலைமுறைகளுடன் நேற்று முன்தினம் 101-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்காக கும்பகோணம் மகாமகம் கீழ்கரையிலுள்ள அபிமுகேஸ்வரர் கோயிலில் உறவினர்கள், நண்பர்கள், முன்னிலையில் சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது. கோவிந்தராஜிடம் அனைவரும் ஆசி பெற்றனர்.

—அனகா காளமேகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.