சர்வதேச குத்துசண்டை போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாட தேர்வான பல்லடத்தை சேர்ந்த இளைஞர் பிரசாந்த்திற்கு பாராட்டு குவிந்து வருகிறது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள கணபதிபாளையம் சிரபுஞ்சி நகரில் வசித்து வரும் துரைசாமி மற்றும் நர்மதா. இவர்களது மகன் பிரசந்த்.இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்பதற்காக பயிற்சியை எடுத்து வருகிறார். மாவட்ட மற்றும் மாநில போட்டிகளில் இதுவரை விளையாடி வந்த பிரசாந்த் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளார். ஏற்கனவே இவர் பல்வேறு போட்டிகளில் பல வெற்றிக் கோப்பைகளையும், பரிசுகளையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் இந்திய அணியில் விளையாடுவதற்காக பயிற்சி பெறுவதற்காக மகாராஷ்டிரா மாநிலம் பஞ்சகனிக்கு சென்று திரும்பியுள்ளார்.அங்கு 10 நாட்கள் தங்கியிருந்து சர்வேதச பயிற்சியாளர்களை கொண்டு அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சி முடிந்து வீடு திரும்பியுள்ள அவரை மாநில இளைஞர் நலத்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். மேலும் இதுகுறித்த செய்தியை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.மேலும் திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினித் அவர்களும் பிரசாந்துக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கணபதிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் நாகேஸ்வரி பிரசாந்தின் வெளிநாட்டு பயண செலவுகளை தானே ஏற்பதாக கூறியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து பிரசாந்த் கூறுகையில் பல வெற்றிகளை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பதே தனது லட்சியம் என்றும் கூறியுள்ளார்.20வயதே ஆன இளைஞர் இந்திய அணிக்காக குத்துசண்டை விளையாட சர்வதேச போட்டிகளில் பங்கேற்பது
அப்பகுதி மக்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.
—-வேந்தன்