இலங்கை சட்டத்திருத்த விவகாரம்: டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சருடன் அண்ணாமலை சந்திப்பு

இலங்கையில் 13வது சட்டத் திருத்தத்தை எந்த மாற்றமும் இல்லாமல் உடனடியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம்…

இலங்கையில் 13வது சட்டத் திருத்தத்தை எந்த மாற்றமும் இல்லாமல் உடனடியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது. திமுக கூட்டணி, அதிமுக, தேமுதிக, நாம் தமிழர், அமமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த தேர்தலில் அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பினர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இபிஎஸ் தரப்பில் அதிமுக சார்பில் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இபிஎஸ், ஓபிஎஸ் இரு தரப்பினரும் ஆதரவு கோரி பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்தனர். இதில் யாருக்கு பாஜக ஆதரவு அளிக்கிறது என்று இதுவரை பாஜக தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை.

https://twitter.com/annamalai_k/status/1621106454735511557

இந்த பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவசரமாக நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். இன்று காலையில் அகில இந்திய பாஜக தலைவர் ஜெ.பி. நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் பற்றி எடுத்து கூறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை இன்று மாலை அண்ணாமலை சந்தித்தார். உடன் மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் இருந்தனர்.

அப்போது, இலங்கையில் 13-வது சட்டத் திருத்தத்தை எந்த மாற்றமுமில்லாமல் உடனடியாக நடைமுறைப்படுத்த, மத்திய அரசு தலையிட வேண்டும் என்ற கோரிக்கை மனுவை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வழங்கினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.