முக்கியச் செய்திகள் தமிழகம்

அம்பத்தூரில் பரபரப்பு; ரூ.12,000 கூடுதலாக பணம் கொடுத்த இந்தியன் வங்கி ஏடிஎம்!

அம்பத்தூரில் இந்தியன் வங்கி ஏடிஎம்மில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கும் போது கூடுதலாக ரூ.12000 வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை அம்பத்தூர் பழைய சிடிஎச் சாலையில் அருகில் அருகே இந்தியன் வங்கி அமைந்துள்ளது. இந்த கிளையின் ஏடிஎம் அதே கட்டிடத்தில் உள்ளது. அதில் இன்று அதிகாலை முதல் பணம் எடுக்க வரும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கூடுதலாக ரூ.12000

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

வந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை அம்பத்தூரில் சேர்ந்த பாலசுப்ரமணி
என்பவர் இந்தியன் வங்கி ஏடிஎம்மில் 3 முறை 20,000, 15,000,10,000 பணம் எடுக்க
முயற்சி செய்துள்ளார். ஆனால் பணம் வரவில்லை மேலும் 8 ஆயிரம் ரூபாய் பணம்
எடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவருக்கு ரூ.20000 ஆக வந்துள்ளது. கூடுதலாக ரூ.12 ஆயிரம் வந்துள்ளது.

அதேபோல் திருமுல்லைவாயிலை சேர்ந்த சந்திரசேகர் என்பவரும் ரூ.20000 ரூபாய் பணம்
எடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் பணம் எடுக்க முடியாமல் ரூ.8 ஆயிரம் எடுக்க
வேண்டும் என கட்டளை வந்துள்ளது. அதன்படி எட்டாயிரம் ரூபாய் எடுக்க முயற்சி
செய்தபோதும் அவருக்கும் 20 ஆயிரம் ரூபாய் பணம் வந்ததாகவும் கூறப்படுகிறது.இதேபோன்று 10 க்கும் மேற்பட்ட இதர வங்கிகளின்சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் கூடுதல் பணம் வந்ததாகவும் அதில் 6 பேர் பணத்தை வங்கிக்கு நேரில் வந்து பணத்தை திருப்பி கொடுத்ததாகவும் இந்தியன் வங்கி தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும் நடந்த தவறு பற்றி வங்கி அதிகாரிகள் கூறுகையில், ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.200
வைக்க வேண்டிய ட்ரேவில் ரூ.500 நோட்டுகளை தவறுதலாக வைத்ததால் இது போன்ற சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவித்தனர். மேலும் ஏடிஎம்மில் தொழில்நுட்ப குழுவினர் உடனடியாக வந்து சரி செய்ததாகவும் கூறப்படுகிறது.

அம்பத்தூரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பரபரப்பான பகுதியிலே இயங்க கூடிய
இந்தியன் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில் அதிக பணம் வந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

டோக்கனுடன் குவிந்த முதலீட்டாளர்கள் – போலீசார் குவிப்பு

Web Editor

இடைத்தேர்தலை நிறுத்தக்கூறி எந்த புகாரும் வரவில்லை- தலைமைத் தேர்தல் அலுவலர் பேட்டி

Web Editor

விடாது துரத்தும் துயரம்; இயக்குநர் ஷங்கர் மருமகன் மீது வழக்குப்பதிவு

G SaravanaKumar