தமிழ்நாட்டில் புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் இன்று மட்டும்  12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி…

நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் இன்று மட்டும்  12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.  இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள்.  அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள்,  மாஸ்க்,  தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இதனிடையே,  இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கும் இந்த உருமாறிய வைரஸ் தொற்றான ஜேஎன் 1 வைரஸே காரணம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் மூன்று பேரும், செங்கல்பட்டில் இரண்டு பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 99 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 118 ஆக இருந்த நிலையில், இன்று 31 பேர் கொரோனாவில் இருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.