தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையின்போது பல்வேறு மாவட்டங்களில் அடுத்தடுத்து கொலைச் சம்பவங்கள் நடைபெற்றதாகக் கூறப்படும் நிலையில், காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் உள்ளிட்டோர் உயிரிழந்த சம்பவங்கள் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் ஒரே நாளில் 11 கொலைகள் நடைபெற்றுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளைக் குறிப்பிட்டு, தவெக அரசையும் முதலமைச்சர் விஜய்யையும் விமர்சித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில்,
“நேற்று மட்டும் தமிழ்நாட்டில் 11 கொலைகள் நடந்துள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தேனியில் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர், திருவள்ளூரில் ஓர் இளம்பெண், சமயபுரத்தில் இரு சிறார்கள், திருச்சியில் ஓர் ஐடி ஊழியர் எனப் பல மாவட்டங்களில் உயிர்கள் பறிபோயுள்ளன. ஒருபுறம் மக்கள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருக்க, இந்த மனிதாபிமானமற்ற ஆட்சியில் மறுபுறம் உயிர்களை இழந்த குடும்பங்களில் மரண ஓலம் கேட்டுக்கொண்டிருக்கிறது.
இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோனாலும், திரைக் கவர்ச்சியால் கிடைத்த வெற்றி தந்த அகந்தையில் வாழும் முதலமைச்சர் விஜய் வாய் திறக்கப் போவதில்லை. முதலமைச்சர் அவர்களே, மக்கள் எல்லாவற்றையும் எப்போதும் சகித்துக்கொண்டே இருப்பார்கள் என்று நினைத்துவிடாதீர்கள்!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




