Skip to content
December 21, 2025
News7 Tamil

News7 Tamil

பொறுப்பும் பொதுநலனும்
News7 Tamil
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • LiveT V
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
sortd
Home » crime » 100 day program in kallakurichi nuthana scam rs 459000 scam in bank accounts of 15 people
குற்றம் தமிழகம் செய்திகள்

கள்ளக்குறிச்சியில் 100 நாள் வேலைத்திட்டத்தில் நூதன மோசடி – இறந்தவரின் வங்கி கணக்கில் பணப்பட்டுவாடா செய்த அலுவலர்கள்!

கள்ளக்குறிச்சி மேலூர் ஊராட்சியில் 100 நாள் வேலைத்திட்டத்தில், இறந்தவர் உள்ளிட்டோரின் வங்கிக்கணக்குகளில் பணம் செலுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் கீழ் வழங்கப்பட்டு வந்த ஊதியத்தை மத்திய அரசு அதிகரித்துள்ளது.…

Author Avatar

Web Editor

June 23, 20232:04 pm #100 days workers#kallakurichi district100 days workமகாத்மா காந்தி ஊரக வளர்ச்சித்திட்டம்bank account sacamkallakurichi collectorscam

கள்ளக்குறிச்சி மேலூர் ஊராட்சியில் 100 நாள் வேலைத்திட்டத்தில், இறந்தவர் உள்ளிட்டோரின் வங்கிக்கணக்குகளில் பணம் செலுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் கீழ் வழங்கப்பட்டு வந்த ஊதியத்தை மத்திய அரசு அதிகரித்துள்ளது. 2023-24 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் கடந்த 2006-ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது. இது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொண்டவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்துடன் 100 நாட்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் தரப்படுகிறது.

இத்திட்டம் மூலம் நாடு முழுவதும் 5 கோடியே 97 லட்சம் குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாக மத்திய அரசின் தரவுகள் கூறுகின்றன.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் மேலூர் ஊராட்சியில் ஜெயக்குமார் என்பவர் மாவட்ட குறைத்தீர் அலுவலகத்தில் தங்களது கிராமத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் முறைகேடு நடந்திருப்பதாக புகார் அளித்தார்.

இதுகுறித்து மேலூர் ஊராட்சிக்கு சென்று ஆய்வு செய்த மாவட்ட குறைதீர் அலுவலர் பல முறைகேடுகளை கண்டறிந்தார். ஆய்வின் இறுதியில் வேலைத்திட்டத்தில் ஈடுபடாத 15 பேரின் வங்கி கணக்கில் ஊதியம் செலுத்தப்பட்டிருப்பதும், அதில் ஒருவர் இறந்த நிலையில் வேறொருவரது வங்கி கணக்கிற்கு ஊதியம் செல்வதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நூதன முறைகேட்டில் இதுவரை ரூ.4.59,000 செலுத்தப்பட்டதாக கண்டறியப்பட்டது. இதனை அடுத்து மாவட்ட ஆட்சியருக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு முறையாக கடிதம் அனுப்பட்டிருக்கிறது. ஜெயக்குமார் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொடுத்த மனுவின் பெயரில் கிடைத்த தகவல்கள் ஊழல் நடைபெற்றிருப்பதை மேலும் உறுதிசெய்கின்றன.

இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, இந்த நூதன மோசடியில் ஈடுபட்ட ஊழியர்கள், அலுவலர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட திட்ட அலுவலர் செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Read More

அதிமுக நிர்வாகிகள் 4 பேர் அதிரடி நீக்கம்.. இபிஎஸ் அறிவிப்பு!

By Web Editor December 20, 2025

முட்டை விலை வரலாறு காணாத உயர்வு.. முட்டை பிரியர்களுக்கு ஷாக்!

By Web Editor December 20, 2025

“தமிழர்களின் தொன்மையை Gen Z தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும்..” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

By Web Editor December 20, 2025

“திமுக அரசின் அலட்சியத்தால் அப்பாவி உயிர்கள் தொடர்ந்து பலியாகி வருவது நெஞ்சை கனக்கச் செய்கிறது..” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

By Web Editor December 20, 2025
#ट्रेंडिंग हैशटैग:#100 days workers#kallakurichi district100 days workமகாத்மா காந்தி ஊரக வளர்ச்சித்திட்டம்bank account sacamkallakurichi collectorscam

Post navigation

Previous Previous post: கோவை முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா திடீர் ராஜினாமா!
Next Next post: லியோவில் அப்பா மற்றும் மகன் வேடங்களில் விஜய்? அதிரவைக்கும் குறியீடுகள்! 
  • About Us
  • Contact us
  • Privacy
  • Advertisement
  • YouTube
  • X
  • Instagram
  • Facebook
  • WhatsApp
© Copyright All right reserved By News7 Tamil WordPress Powered By

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading