நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டது, ரசிகர்கள் பலரும் முனுமுனுக்கும் இந்த பாடலின் லிரிக் வீடியோவில் சில மறைமுக குறியீடுகளும் இடம் பெற்றுள்ளதால் படத்தின் கதையை ரசிகர்கள் யூகிக்க தொடங்கியுள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்ற “வாத்தி கம்மிங்” பாடலுக்கு கிடைத்த அமோக வெற்றிக்கு பிறகு, ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத்தின் இசையமைப்பில், நடிகர் விஜய், அனிருத் மற்றும் பின்னணி பாடகர் அசல் கோலார் குரலில், விஷ்ணு எடவன் பாடல் வரிகளில் லியோ திரைப்படத்தின் முதல் பாடலான “நா ரெடி” பாடல் வெளியாகியுள்ளது.
பொதுவாக திரையில் தான் சில விஷயங்களை படக்குழு சொல்லி இருப்பார்கள், ஆனால் இந்த பாடலில், முழுவதுமே பல ஹிண்ட் கொடுத்து வைத்துள்ளார்கள். இப்பொழுது, இந்த பாடலில் பல மறைமுக குறியீடு தெரிந்துள்ளது அதனை அலசி ஆராய்ந்து, அதன் அர்த்தங்களை தற்பொழுது காணலாம்.
முதல் ஃபிரேமிலேயே இது பக்காவான ஆக்ஷன் திரைப்படம் என வெளிப்படையாக சொல்லிவிட்டனர். தயாரிப்பாளரின் பெயர் வரும் இடத்தின் சுவற்றில் இரு பக்கமும், தலா ஒரு ராஜா சீட்டும், அதற்கு துணையாக இரு ஜேக் சீட்டுகளும் உள்ளன. இதன் மூலமாக இதில் இரு கதாநாயகர்கள் எனவும், இருவருக்குமே நல்ல பின்புலம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. அடுத்ததாக இசையமைப்பாளர் பெயர் வரும் இடத்தில் பெரிய அளவிலான பாய்லர்கள் மற்றும் இலை போன்ற பொருட்களை வடிகட்டும் பாத்திரங்கள் இருக்கிறது.
அடுத்ததாக இயக்குநர் பெயர் வரும் ஃபிரேமில் பல திடுக்கிடும் தகவல் தெரியவருகிறது. அதில் லியோ டைட்டில் அறிவிப்பு போஸ்டரில் இருந்த, சாக்லேட்டில் கைகளை முக்கிய விஜய்யின் புகைப்படமும், ரோலக்ஸ் உபயோகப்படுத்திய கத்திகளும், முதல் சிங்கிள் போஸ்டரில் இருந்த விஜய்யின் கையில் இருந்த பிஸ்டலும் அங்கே இருக்கிறது, கூடவே ஒரு மேப் போன்ற பேப்பர் சுற்றப்பட்டு உள்ளது. இது விஜயை கொல்லுவதற்கான ஸ்கெட்ச்-ஆக கூட இருக்கலாம். இங்கே கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இதில் இருக்கும் விஜய்யின் முகத்துக்கும் நடனம் ஆடும் விஜய்யின் முகத்துக்கும் துளியும் கூட சம்பந்தமில்லை, இங்கும் லோகேஷ் இது டபுள் ஆக்ஷன் திரைப்படம் என சொல்கிறார். ஒருவேளை இந்த கொலையை செய்பவர்கள் ரோலக்ஸ் கேங்காக கூட இருக்கலாம், அவர்கள் லியோ-வை கொலை செய்ய துடிப்பவர்களாக கூட இருக்கலாம்.
மற்றொன்று அந்த மேஜையில் இருக்கும் காப்பு, நடனம் ஆடும் விஜயின் கைகளில் தான் உள்ளதே தவிர, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் உள்ள விஜய் கைகளில் இல்லை. அப்பொழுது ஒரு விஜயே இன்னொரு விஜயை கொல்ல துடிக்கிறாரா எனும் எனும் மாபெரும் கேள்வி எழுகிறது.
அடுத்த ஃபிரேமில் லியோ டைட்டில் கார்டு வருகையில், வா அண்ணா வா அண்ணா எனும் பின்னணி குரல் கேட்கிறது, இது தற்பொழுது, விஜய்யை அரசியலுக்கு அழைத்த மாணவியின் ஆண் வெர்ஷன் குரல் போலவே இருக்கிறது, சிகரெட் போதையில் இருக்கும் விஜய் ஒரு இளைஞனின் பேட்சை கேட்டு களத்தில் இறங்குவது போல், அதவாது நடன களத்தில் இறங்குவது போன்று உள்ளது. இதில் பல இடங்களில் விஜய்யோ அல்லது அவர் பெயர் வரும் இடங்களில் மற்றும் தான் சிங்கம் வருகிறது அதாவது “லியோ” வருகிறது. ஆக.. இதில் ஒரு விஜய்யின் பெயர் லியோவாகவும் இன்னொரு விஜய்யின் பெயர் வேரோன்றாக இருக்க வாய்ப்புள்ளது, இதில் இன்னொரு அர்த்தமும் தெரிகிறது; அது இந்த தொகுப்பின் இறுதியில் தெரிவிக்கப்படும்.
அடுத்ததாக “எவன் தடுத்தும் என் ரூட்டு மாறாதப்பா ” எனும் வார்த்தையில் தீவிர அரசியல் இருப்பது அப்பாட்டமாக தெரிகிறது. விஜய்யின் முந்தைய படங்களான தலைவா, கத்தி, மெர்சல், சர்கார் ஆரம்பித்து தற்பொழுது வெளியான முதல் பாடல் அறிவிப்பு போஸ்டர்கள் வரை, அரசியல் தலைவர்களின் விமர்சனங்கள் நாம் எல்லாரும் அறிந்ததே, அது நல்லதோ கெட்டதோ, என் மக்களுக்காக, குறிப்பாக என் நண்பா, நண்புகளுக்காக நான் அதனை கண்டிப்பாக செய்வேன், என் ரூட்டு மாறவே மாறாது என கூறும் விஜயின் பதில் மெய்சிலிர்க்க வைக்கிறது.
பின்னர் 2, 3 ஸ்டெப்புகள் கழித்து. “கெடா வெட்டி கொண்டாங்டா என் பசி நான் தணிக்க” எனும் வார்த்தைகள் வரும் ஃபிரேமில் மன்சூர் அலி-கான் ஒரு வாளி நிறைய இருக்கும் சோற்றை அள்ளி போட்டு பொளந்து கட்டுவது போன்று உள்ளது, இதனை விக்ரமின் அறிவிப்பு வீடியோவில் கண்டுள்ளோம், அதில் அரசியல் தலைவர்கள், உட்பட்ட அரசாங்க பதவிகளில் உள்ளவர்களுக்கு கிடாய் விருந்தளிப்பார் உலக நாயகன், அதே ஆடுகுழம்பை இங்கேயும் கொண்டு வந்துள்ளார் இயக்குநர் லோகேஷ்
அடுத்ததாக இந்த பாடலில் பல இடங்களில் கொத்து கொத்தாக பல கண்ணாடி பாட்டில்கள் உள்ளன. அவை பார்ப்பதற்கு ரசாயன பாட்டில்கள் போலவே தெரிகிறது. இவற்றை கைதி மற்றும் விக்ரம் திரைப்படத்தில் அந்த கமிஷனர் ஆபீஸ்சுக்கு கீழே இருந்த ரகசிய குடோனில் கண்டுள்ளோம், அது இங்கேயும் இருக்கையில் இது போதை பொருட்கள் கிடங்காக இருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், லியோவின் முதல் அப்டேட் வீடியோவில் பார்த்த சாக்லேட் ஃபேக்டரி இது கிடையாது, இது அதற்கு முற்றிலும் நேர் மாறான ஒரு கிடங்கு, ஏனெனில், பெட்டி பெட்டியாக ரசாயன பாட்டில்களும், கோப்புகளும், போதை பொருட்களை மறைத்து வைத்து கொண்டு போக உதவும் டயர்களும், ஆர் டி எஸ் சேமித்து வைக்கும் டப்பாக்களுமே இங்கு காணப்படுகின்றன. ஆக, இந்த இடம் ரோலக்சுக்கு மிகவும் நெருக்கமான இடமாக இருக்க பெரிதும் வாய்ப்புள்ளது.
அடுத்தது அசல் கோலாரின் வேகமான ரேப் ஆல், இவர்கள் செய்யும் தொழிலின் ஒரு hint தெரிகிறது. புகையிலை விதைத்து அறுவடை செய்யும் நேரத்தில், கூடவே சேர்ந்து வளர்ந்த களைகளை பறிப்பது போல, கூடவே இருந்து குழி பரிப்பவர்களை கண்டறிந்து சம்பவம் செய்வோம் என்பதை மிகவும் ஸ்டைலான தோணியில் கூறியுள்ளார்.
இந்த காட்சிகளை எங்கோ பார்ப்பது போல இருந்தாலும், அதுதான் உண்மை. கைதி திரைப்படத்தில் அன்பு, அதாவது நடிகர் அர்ஜுன் தாசுடன் அஜாஸ் அகமது, அதாவது நடிகர் கண்ணா ரவி கூடவே இருந்து நரேனுக்கு திட்டங்கள் முழுவதையும் சொல்லி விடுவார், அவரை கண்டுபிடித்து அர்ஜுன் தாசின் ஆட்கள் நரேன் கண் முன்னாடியே கொன்று விடுவார்கள் அல்லவா, மேலும் அதே திரைப்படத்தில் போலீசார் பலரை லாரியில் ஏற்றி அனுப்புவார்கள் அல்லவா, அது போலவே இங்கும் செய்வோம் என கூறுகிறார்.
அடுத்த பிரேம்களை நிறுத்தி நிதானமாக பார்க்கையில், ப்ளூ பிரிண்ட் குறித்த வார்த்தைகள் வருகின்றன, இதை பொறுத்த மட்டில், விக்ரம் திரைப்படத்தில் அந்த கமிஷனர் ஆபீசின் ப்ளூ பிரின்டையும், சந்தானம், அதாவது விஜய் சேதுபதி வீட்டின் ப்ளூ பிரிண்ட்டையும் தீர அலசி ஆராய்ந்து மிஷனை வெற்றிகரமாக முடிப்பார்கள். அதையும் இங்கேயே காப்பி செய்துள்ளனர். உலகம் பூரா நம்ம ரூல்ஸ் என்னும் வார்த்தை வருகிறது,
மீண்டும் இது டபுள் ஆக்ஷன் படம் என்பதை நிரூபிக்கும் விதமாக லோகி, ஒரு விஜய்யின் கையில் ஆயுதமாக கத்தியும், இன்னொரு விஜயின் கையில் காப்பும் காட்டுகிறார். சிங்கிள் இல்ல கும்பல் ஃபைட் என கூறுகையில், கேங் வார் சம்பந்தமாக இருக்கும் எனவும், அதற்காக ஊர் விட்டு ஊர் ரயிலில் பயணிக்கும் காட்சியும் இடம்பெற வாய்ப்புள்ளது,
ஒருவேளை இதற்காக தான் வாராங்கல் ரிஜஸ்ட்ரேசன் உள்ள தெலங்கானா வாகனத்தில் ஒரு குழு பனி பிரதேசம் நோக்கி பயணிக்கிறதோ..? ராப்பின் இறுதியில் “பத்த வச்சி புகைய விட்டார் பவர் கிக்கு” எனும் வார்த்தையிலேயே , இது சாதாரண சிகரெட் அல்ல, போதை பொருள் என்று தெளிவாக தெரிகிறது.
அடுத்த பிரேமில், தன்னுடன் ஆடும் நடன் கலைஞர்களை சந்திக்கிறார் அதில் ரைட் சைடில் மிசைக்கார தாத்தாக்கள் உபயோகிக்கும் புகையிலை ஊதுகுழல் போன்ற தோற்றத்தில் தாஸ்&கோ எனும் பேனர் தொங்கவிடப்பட்டடுள்ளது. இது விஜயின் பெயராக இருக்க பெரிதும் வாய்ப்பில்லாத பட்சத்தில், சஞ்சய் தத்தின் கம்பெனி பெயராக கூட இருக்கலாம். “கத்தி பல கத்தி என்ன குத்த காத்திருக்கு” எனும் பகுதியில், இதுவரை எல்சியூவில் கத்தியை பெரும்பாலும் உபயோகித்தனர் ரோலக்ஸ் மற்றும் அன்புவின் Gang தான், எனவே அவர்களை குறிவைத்து விஜய் சொல்லலாம் எனவும் அர்த்தம் தெரிகிறது.
“ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கு, கேட்டாலே அதிரும் பார் உனக்கு” எனும் வார்த்தைகள் பெரும்பாலும் மக்களுக்கு புரிந்திருக்கும், யாரை சொல்கிறார் எனவும் புரிந்திருக்க வாய்ப்புள்ளது. புரியவில்லை எனில் காலை சூரியன் உத்தித்த பிறகு சூரிய நமஸ்காரம் செய்தால் புரிய வாய்ப்புள்ளது. பின்னர் தம்பிகளுக்கும் தங்கைளுக்கும் போஸ்டர் அடிக்க சொல்லும் விஜய், “அண்ணன் ரெடி வரவா, தனியா வரவா என கேட்கிறார்”. அண்ணன் கேட்பதற்கு முன்பாகவே திருச்சி முதல் புதுச்சேரி வரை இளையோர்கள் போஸ்டர் அடித்து ரெடி ஆகிவிட்டனர். தனியாக வரவா என கேட்கும் தளபதி, அதாவது நடிகர் விஜய் அவர்கள், ஒருவேளை வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் நின்றால் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல், யாருக்கும் ஆதரவும் அளிக்காமல் தனியாக வரப்போவதாக அறைகூவல் விடுக்கிறார் போலும். “விரல் இடுக்கில் தீ பந்தம் நான் ஏற்றதான்” எனும் வசனம் தான் யாரையோ குத்திகாட்டுவது போலவே தெரிகிறது.
இந்த மொத்த படமும், இயக்குநர் லோகேஷ் கனகராஜின் எல்சியூ- வை வைத்து பார்க்கையில் ஒரு கதை தென்படுகிறது. அது என்னவெனில் சிறு வயதில் விஜய் தனது மகனை அதாவது இன்னொரு விஜயை தற்செயலாக பிரிந்திருக்களாம், அந்த விஜய் சஞ்சய் தத் கையில் கிடைத்து தனது வளர்ப்பு மகனாக வெளிநாட்டில் வளர்த்து இருக்கலாம். சஞ்சய் தத்தின் தொழிற்சாலையாக கூட அந்த தாஸ் & கோ, தெலங்கானாவில் இருக்காலாம், அவர் வெளிப்படையாக புகையிலை தொழில் செய்து, மறைமுகமாக ரோலக்ஸ் உடன் இணைந்து போதை வஸ்த்துக்களை உருவாக்கி சப்ளை செய்பவராக கூட இருக்கலாம். திரும்பி ஊருக்கு வரும் விஜய்க்கு அந்த தொழிற்சாலையில் நல்ல வரவேற்பு கிடைக்கையில் வரும் பாடலாக கூட இந்த பாடல் இருக்கலாம்.
பின்னர், தனது வளர்ப்பு தந்தைக்கு இப்படி எதிரிகள் சூழ்ந்து உள்ளனர் என்பதை அறிந்த சிறிய விஜய் தனது ஆட்பலத்தொடு தெலங்கானா வண்டியில் கிளம்பி பனி பிரேதசத்தில் இருக்கும் அந்த எதிரியை கொலை செய்ய செல்கையில், அவர்களை பந்தாட தனது நீண்ட வாலை சாக்லேட்டில் முக்கி எடுத்து, ஃபைட்டுக்கு தயாராகையில், காரில் இருந்து இறங்கி வார்த்தாள் இருவரும் ஒரே விஜய்யாக கூட இருக்கலாம். வாழ்க்கையில் முதன் முறையாக சந்திக்கும் அப்பாவும், மகனும் பேசுகையில் அந்த போதை வஸ்த்துக்களால் என்னென்ன பிரச்னை வருகிறது என்பதை அப்பா விஜய் சொல்ல, அதனை புரிந்து கொண்டு. வந்த ஆட்களை அடித்துவிட்டு, இரு விஜய்களும் தெலங்கானா சென்று சஞ்சய் தத்தை கொன்று விட்டு. விக்ரமில் விஜய் சேதுபதியின் வீட்டை வெடிகுண்டு வைத்து இடித்தது போல, அங்கு இருக்கும் ஆர்டிஎக்ஸ் வைத்து அந்த ஃபேக்டரியை அழிக்கும் வினையாக கூட இருக்கலாம். ஆனால் இதில் இதில் வயது முதிர்ந்த விஜய்யின் பெயர் தான் லியோ என்பது நன்றாகவே தெரிகிறது. இளைய விஜய்யின் பெயர் என்னவென்பது ஒரு குழப்பமாகவே உள்ளது. இரு விஜய்க்கும் இருக்கும் வித்தியாசங்கள் என்னவென்றால் காப்பு, தலை முடி, நரைத்த தாடி, வாள் மற்றும் துப்பாக்கி, தோற்றம் மற்றும் கழுத்தில் அணிந்திருக்கும் டாலர் . ஒன்று இரு விஜய்யும் தந்தை மகன்களாக இருக்கவேண்டும், அல்லது சகோதரர்களாக இருக்க வேண்டும்.
எது எப்படியோ 2023 தீபாவளிக்கு வெளியாகும் லியோ, ரசிகர்களுக்கு ஒரு சரவெடியாக அமையும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.. இருப்பினும் டிரெயிலர் அல்லது டீசருக்காக காத்திருப்போம்…
– ஆண்ட்ரூ, நியூஸ்7 தமிழ்


















