கோவை முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா திடீர் ராஜினாமா!

கோவையில் தனியார் பேருந்து பெண் ஓட்டுநர் ஷர்மிளா, தனது பணியை ராஜினாமா செய்துள்ளார். கோவையில் தனியார் பேருந்தில் பெண் ஓட்டுநராக ஷர்மிளா கடந்த 3 மாதங்களாக பணியாற்றி வந்தார். கோவையில் முதல் பெண் பேருந்து…

கோவையில் தனியார் பேருந்து பெண் ஓட்டுநர் ஷர்மிளா, தனது பணியை ராஜினாமா செய்துள்ளார்.

கோவையில் தனியார் பேருந்தில் பெண் ஓட்டுநராக ஷர்மிளா கடந்த 3 மாதங்களாக பணியாற்றி வந்தார். கோவையில் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் என்பதால், அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், ஷர்மிளா தனது ஓட்டுநர் பணியை இன்று திடீரென ராஜினாமா செய்தார். இது தொடர்பாக நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்த ஷர்மிளா, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோர் பயணச்சீட்டு எடுத்து தான் எங்களது பேருந்தில் பயணித்தனர். கனிமொழி பேருந்தில் பயணித்த போது அவருடன் வந்தவர்களிடம் நடத்துநர் கடுமையாக நடந்ததை கண்டித்தேன். நான் விளம்பரம் தேட முயற்சி செய்வதாக பேருந்து உரிமையாளர் குற்றம்சாட்டி, வாக்குவாதம் செய்ததால் பணியை ராஜினாமா செய்தேன்.

இவ்வாறு ஷர்மிளா தெரிவித்தார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.