முக்கியச் செய்திகள் இந்தியா கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

100 நாள் வேலைத் திட்டம்: தொடர் விமர்சனம் ஏன் ?


ஜோ மகேஸ்வரன்

கட்டுரையாளர்

உலக வங்கியின் பாராட்டு, கிராமப்புற பெண்களின் பொருளாதார மேம்பாடு என முக்கியத்துவம் பெற்றது 100 நாள் வேலைத் திட்டம். ஆனால் இந்த திட்டம் தற்போது  ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தப்படுகிறதா? அரசியல் கட்சிகள் தொடங்கி நீதிமன்றம் வரை அதிருப்தி தெரிவிப்பது ஏன் ?

கிராமப்புறத்தில் குடும்பத்தில் ஒருவருக்கு ஆண்டிற்கு 100 நாட்கள் வேலையை உறுதி செய்யும் வகையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்காக 2005ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இதன்படி, குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாட்கள் வேலை தரப்படும். அவர்கள் வசிக்கும் இடத்தில் இருந்து 5 கி.மீ தூரத்திற்குள் வேலை வழங்கப்பட வேண்டும். வேலை வழங்கப்படாவிட்டால் ஊதியம் வழங்கப்பட வேண்டும். வேலை என்பது வாய்ப்பு என்று இல்லாமல் உரிமையாக பார்ப்பது என்றெல்லாம் வரையறுக்கப்பட்டது. கடந்த 2006ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாட்டின் கடலூர், திண்டுக்கல், நாகப்பட்டினம், சிவகங்கை, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் உட்பட இந்தியா முழுவதும் 200 மாவட்டங்களில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து, 2007ம் ஆண்டும் ஏப்ரல் மாதம் மேலும் 130 மாவட்டங்களுக்கும் 2008ம் ஆண்டு நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் 50 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தொடக்கத்தில் ஒரு நாளைக்கு ரூ. 80 ஊதியம் வழங்கப்பட்டது. படிப்படியாக உயர்ந்து தற்போது ஒரு நாளுக்கு ரூ. 280 வரை வழங்கப்படுகிறது. இதை ரூ. 300 ஆக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாநிலத்திற்கு மாநிலம் இந்த தொகையும் மாறுபடுகிறது. ஆண்டிற்கு, நூறு நாட்கள் வேலை வழங்கும் திட்டம் என்பதால், 100 நாள் வேலை என்று சொல்லப்படுகிறது. இதன் மூலம், கிராம ஊராட்சிகளில் சாலைகளை சீர் செய்வது, நீர் நிலைகளை மேம்படுத்துவது உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

வேலை வாய்ப்பு, குறிப்பாக கிராமப்புற பெண்களுக்கான பொருளாதார பாதுகாப்பு உள்ளிட்டவற்றையும் இந்த திட்டம் வழங்குவதாக கூறப்படுகிறது. உலகின் மிகப்பெரிய சமூகப் பாதுகாப்புத் திட்டம் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு உலக வங்கியின் பாராட்டுதலையும் இத்திட்டம் பெற்றுள்ளது. திட்டத்தால் விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. ஆகையால், இந்த திட்டத்தை விவசாய பணிகளுக்கும் விரிவாக்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் ஒருபுறம் இருக்கிறது.

இந்நிலையில், 100 நாள் வேலைத் திட்டத்தில் தவறான வழிகாட்டுதல், தேவையற்ற வேலைகள், நிதி முறைகேடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் அதிகம் வருகின்றன குறிப்பாக, தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு, ’’100 நாள் வேலைவாய்ப்பு திட்டங்கள் முறையாக நடைபெறவில்லை. இந்த வழக்கில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை செயலரை இணைக்க’’ உத்தரவிட்டதோடு, திட்டத்தின் நடைமுறைகள் தொடர்பாகவும், வழக்கு குறித்தும் ஊரக வளர்ச்சி துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

ஏற்கனவே 100 நாள் வேலைத்திட்டம் குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் விமர்சனம் செய்துள்ளனர். . சமூக வலைதளங்களிலும் கடுமையான விமர்சனங்கள் வருகின்றன. ’உழைக்காமல் ஊதியம் கொடுக்கும் இந்த திட்டத்தால் பாதிப்புகளே அதிகம்’ என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், உயர்நீதிமன்ற நீதி மன்றத்தின் உத்தரவு முக்கியத்துவம் பெறுகிறது. ஆக்கப்பூர்வமாக தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் குறைகளைக் களைந்து, முறைப்படுத்தி, கண்காணித்து, திட்டத்தின் பலன் முழுமையாக கிராமப்புற மக்களுக்கு சென்றடைய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்பதே பலரின் விருப்பமாக இருக்கிறது. நல்ல திட்டம், கிராமப்புற மக்களுக்கு தேவையான திட்ட,ம். ஆனால், குறைகள் களையப்படுமா..?

இதன் வீடியோ செய்தி – https://www.youtube.com/watch?v=tHXxhg7jcZw

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சைதாப்பேட்டை தொகுதியில் மா.சுப்பிரமணியம் முன்னிலை

Halley Karthik

தமிழ் திரையுலகின் பொல்லாதவன்

Web Editor

நாகாலாந்தில் அப்பாவி மக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்; போலீசார் வழக்குப்பதிவு

Arivazhagan Chinnasamy