பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்க அதிகாரிகள் பரிந்துரை

நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கலாம் என முதலமைச்சரிடம் அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொங்கல் பரிசு குறித்த ஆலோசனைக்…

நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கலாம் என முதலமைச்சரிடம் அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொங்கல் பரிசு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் பெரியகருப்பன், சக்கரபாணி, கூட்டுறவு – உணவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பொங்கல் சிறப்புத் தொகுப்பாக இந்த ஆண்டு அரிசி, சர்க்கரை, பருப்பு, முந்திரி, திராட்சை, நெய், கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிலையில், வரும் 2023ஆம் ஆண்டு பொங்கல் பரிசாக என்னென்ன பொருட்கள் வழங்கலாம் என இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ரொக்கப்பணமாக ரூ 1,000 வழங்குவதா அல்லது பரிசுத் தொகுப்பில் கூடுதலாக பச்சரிசி, சர்க்கரை, ஆவின் நெய், கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்குவதா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதையடுத்து, பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கலாம் என அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.