2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வருகிறது. கூட்டணியில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள், மதிமுகவுக்கு 4 தொகுதிகள், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவற்றுக்கு தலா 2 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது.
இந்த நிலையில் திமுக கூட்டணில் புதிதாக இணைந்துள்ள தேமுதிக கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ் நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இடையே கையெழுத்தானது.








