நடிகை சௌகார் ஜானகி மறைவுக்கு பிரேமலதா விஜயகாந்த் இரங்கல்!

நடிகை சௌகார் ஜானகி மறைவுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி அவர்கள் மறைவிற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி அவர்கள் (வயது 94) உடல் நலக்குறைவு காரணமாக காலமானார் செய்தி மிகுந்த வேதனையையும் ஆழ்ந்த வருத்தத்தையும் அளிக்கிறது.

திரையுலகில் தனது தனித்துவமான நடிப்பாற்றலாலும், கலைத்திறமையாலும் பல தலைமுறை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் சௌகார் ஜானகி அவர்கள். பல்வேறு கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து, தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்த்த அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவருடை ஆன்மா சாந்தியடையவும், அவரை இழந்து வாடும் திரையுலகினருக்கும், குடும்பத்தாருக்கும் கேப்டன் சார்பாகவும், தேமுதிக சார்பாகவும், எனது சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.