சென்னை விமான நிலையத்தில் 1.36 கிலோ தங்கம் பறிமுதல்

வங்கதேசத்திலிருந்து சென்னை வந்த பயணிகள் விமானத்தில் சீட்டிற்கு அடியில் மறைத்து வைத்திருந்த ரூ.63 லட்சம் மதிப்புடைய 1.36 கிலோ தங்கக்கட்டியை சுங்கத்துறை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து பயணிகள்…

வங்கதேசத்திலிருந்து சென்னை வந்த பயணிகள் விமானத்தில் சீட்டிற்கு அடியில் மறைத்து வைத்திருந்த ரூ.63 லட்சம் மதிப்புடைய 1.36 கிலோ தங்கக்கட்டியை சுங்கத்துறை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து பயணிகள் விமானம் பகல் 12:30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. இந்த விமானம் மீண்டும் சென்னையில் இருந்து வங்கதேசம் தலைநகர் டாக்காவுக்கு பகல் 2 மணிக்கு புறப்பட்டு செல்ல வேண்டும். அதற்காக விமான பணியாளர்கள் விமானத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு விமானத்திற்குள் ஒரு இருக்கை வழக்கத்துக்கு மாறாக உயரமாக தூக்கிக் கொண்டு இருந்தது. அதை சரி செய்ய முயன்ற போது. அதற்கு கீழே ஏதோ ஒரு பொருள் மறைத்து வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். உடனே இருக்கையை எடுத்து பார்த்தபோது, அதற்கு கீழே கறுப்பு கலரில் ஒரு பார்சல் இருந்தது.

https://twitter.com/ChennaiCustoms/status/1555167243662544896

இதையடுத்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மெட்டல் டிடெக்டருடன் விரைந்து வந்து, அந்த கருப்பு பார்சலை சோதனை செய்தனர். அதில் வெடி மருந்து, வெடிகுண்டு எதுவும் இல்லை என்று தெரிய வந்தது. அதை திறந்து பார்த்த போது உள்ளே ஆங்கில் வடிவமான ஒரு தங்க கட்டி இருந்ததை கண்டுபிடித்தனர்.

உடனடியாக சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து, தங்க கட்டியை பறிமுதல் செய்து, ஆய்வு செய்த போது, ஒரு கிலோ 364 கிராம் எடை இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 63 லட்சம். இதை அடுத்து சுங்க அதிகாரிகள் தங்க கட்டியை பறிமுதல் செய்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.