ஹோட்டலில் ஊழியருக்கு கொரோனா தொற்று; தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ரத்து!

வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெறவிருந்த முதலாவது ஒருநாள் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. தென்…

வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெறவிருந்த முதலாவது ஒருநாள் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டி20 மற்றும் ஒரு நாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே நடைபெற்ற டி20 தொடரை 3-0 என இங்கிலாந்து அணி கைப்பற்றியதை தொடர்ந்து முதலாவது ஒரு நாள் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்தது. இதனிடையே தென்னாப்பிரிக்க அணி வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து போட்டி இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் உள்ள ஊழியர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையின்போது 2 ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டது தெரியவந்ததை தொடர்ந்து இன்று நடைபெறவிருந்த இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஐசிசி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் இங்கிலாந்து வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால் தென் ஆப்பிரிக்கா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி ரத்து செய்யப்படுகிறது என பதிவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply