மதுரை விமான நிலையத்திற்கு கண்ணகியின் பெயரை சூட்ட வேண்டும் என தேசிய செட்டியார் பேரவை கோரிக்கை!

மதுரை விமான நிலையத்திற்கு கண்ணகியின் பெயரை சூட்ட வேண்டும் என தேசிய செட்டியார் பேரவை நிறுவனத் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா கோரிக்கை வைத்துள்ளார். மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கக்…

மதுரை விமான நிலையத்திற்கு கண்ணகியின் பெயரை சூட்ட வேண்டும் என தேசிய செட்டியார் பேரவை நிறுவனத் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா கோரிக்கை வைத்துள்ளார்.

மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கக் கட்டிடத்தில் தேசிய செட்டியார் பேரவையின் மாநில மாநாடு நடைபெற்றது. அதில் தேசிய செட்டியார் பேரவையின் நிறுவனத் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா பங்கேற்றார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காலங்காலமாக செட்டியார் சமூகத்திற்கு வழங்கப்பட்ட வழிபாட்டு மரியாதையை மீண்டும் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். மேலும் மதுரை விமான நிலையத்திற்கு கண்ணகியின் பெயரை சூட்ட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply