கொரோனாவால் உயிரிழந்த ஈஸ்வதினி நாட்டின் பிரதமர்!

ஆப்பிரிக்க நாடான ஈஸ்வதினி (Eswatini) நாட்டின் பிரதமரான ஆம்புரோஸ் திலாமினி கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 52. ஆப்பிரிக்க கண்டத்தில் தென் ஆப்பிரிக்காவிற்கு அருகில் இருக்க்கிறது ஈஸ்வதினி நாடு.…

ஆப்பிரிக்க நாடான ஈஸ்வதினி (Eswatini) நாட்டின் பிரதமரான ஆம்புரோஸ் திலாமினி கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 52.

ஆப்பிரிக்க கண்டத்தில் தென் ஆப்பிரிக்காவிற்கு அருகில் இருக்க்கிறது ஈஸ்வதினி நாடு. முன்னதாக இது சுவாஸிலாந்து என அழைக்கப்பட்டது.

இந்த நாட்டின் பிரதமர் ஆம்புரோஸ் திலாமினி கடந்த 4 வாரங்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அண்டை நாடான தென் ஆப்பிரிக்காவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். அவரின் உடல்நிலை மோசமடைந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக அந்நாட்டின் துணை பிரதமர் அறிவித்துள்ளார்.

மிகவும் சிறிய நாடான ஈஸ்வதினியின் மக்கள் தொகை சுமார் 12 லட்சமாக உள்ளது. இதில் 6,700 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 127 பேர் உயிரிழந்துள்ளனர்.

அந்நாட்டின் பிரதமரே கொரோனாவால் உயிரிழந்திருப்பது அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply