கெயில் குழாய் பதிப்பு திட்டத்தை, விளைநிலங்களுக்கு பதிலாக நெடுஞ்சாலை ஓரம் செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓமலூர் அருகே உள்ள காருவள்ளி உள்ளிட்ட மூன்று ஊராட்சிகளில், கெயில் எரிவாயு குழாய் பதிப்பு திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டம், சின்னதிருப்பதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிப்பதை கைவிட வேண்டும், என வலியுறுத்தப்பட்டது.
விவசாயிகள் மேற்கொள்ளும் சட்டப் போராட்டத்துக்கு, தமிழக அரசு ஆதரவு தரவேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. எரிவாயு குழாய் காரணமாக, விவசாய விளை நிலங்கள் தரிசு நிலங்களாக மாறிவிடும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் நன்மைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கும் அதே வேளையில், திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்த வேண்டும் என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.







