திருப்பூரில் சூறாவளியுடன் கனமழை – ரூ 14 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் சேதம்!

திருப்பூரில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதம் அடைந்தன.  திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. மழையின் காரணமாக கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியும்…

திருப்பூரில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதம் அடைந்தன. 

திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. மழையின் காரணமாக கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியும் நிலவியது. இந்நிலையில் திருப்பூரில் காலை 7 மணி நிலவரப்படி திருப்பூர் வடக்கு பகுதியில் 2 மி.மீ.குமார்நகர் பகுதியில் 1 மி.மீ, திருப்பூர் தெற்கு பகுதியில் 13 மி.மீ, பல்லடம் ரோடு பகுதியில் 2 மி.மீ, என மொத்தம் 91.10 மி.மீட்டர் மழை பதிவானது.

இதற்கிடையே திருப்பூரை சேர்ந்த கணேசன் என்பவர் நல்லூர் மணியக்காரம்பாளையத்தில் 4 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் வாழை பயிரிட்டிருந்தார். அனைத்து வாழைகளும் நன்கு விளைந்து குழை தள்ளிய நிலையில் இருந்தன.

சூறாவளி காற்றின் காரணமாக 4 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்களும் முறிந்து நாசமாகின. இதன் மதிப்பு ரூ.14 லட்சம் என தெரிவித்த கணேசன், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு தனக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.