சந்திரசேகர ராவுக்கு கொரோனா தொற்று!

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பல சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், மத்திய…

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பல சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் என அனைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தற்போது தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெலங்கானா மாநில தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருப்பதாக கூறியுள்ளார். இதனால், தனது பண்ணை வீட்டில் முதலமைச்சர் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தலைமை செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதனைதொடர்ந்து முதலமைச்சரை மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெலங்கானா தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், தற்போது நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.50 கோடியாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.