செவ்வாயில் கிரகத்தில் ஹெலிகாப்டரை பறக்க விட்டு அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் வரலாற்று சாதனை படைத்துள்ளது.
நாசா விண்வெளி ஆய்வு மையம் செவ்வாய் கிரகத்துக்கு கடந்த ஆண்டு ஜூலை பெர்செவெரன்ஸ் ரோவர் விண்கலத்துடன் சிறிய வகை ஹெலிகாப்டர் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டது. ‘இன்ஜெனியூட்டி’ என பெயரிடப்பட்ட இந்த ஹெலிகாப்டரை நாசா விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் பறக்க வைத்து ஆய்வு செய்தனர்.
செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள இந்த ஹெலிகாப்டர் பயன்படுத்தப்படவுள்ளது. வெற்றிகரமாக பறக்க வைக்கப்பட்ட இந்த ஹெலிகாப்டர் 30 விநாடிகள் வரை பறந்தது. செவ்வாய் கிரகத்தில் இருந்து 3 மீட்டர் உயரம் மட்டுமே இந்த ஹெலிகாப்டர் பறக்கும் திறன் கொண்டது. பூமியைத் தவிர வேறு ஒரு கிரகத்தில் ஹெலிகாப்டர் ஒன்றை பறக்க வைத்து நாசா விண்வெளி ஆய்வு மையம் வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இது குறித்து பேசிய நாசா விஞ்ஞானி ஃபாரா அலிபே, “நூறு ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் நாம் ஹெலிகாப்டர், விமான உதவியுடன் பறக்கத் தொடங்கிவிட்டோம். இப்போது நாம் வேறொரு கோளில் பறந்திருப்பது மிகவும் சிலிர்ப்பாக உள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி மற்றம் பொறியியலின் கூட்டு முயற்சியில் இந்த வரலாற்று சானை நிகழ்ந்துள்ள” என அவர் கூறினார்.







