ஆப்கானிஸ்தான் நாட்டின் கஸ்னி மாகாணத்தில் இன்று நடைபெற்ற பயங்கர குண்டுவெடிப்பில் சிக்கி 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தெற்காசியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகம் உள்ள நாடுகளில் ஆப்கானிஸ்தானும் ஒன்று. இங்கு தலிபான்கள் மற்றும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளால் அவ்வப்போது அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இதனை அடுத்து பயங்கரவாதிகளை ஒடுக்க ஆப்கானிஸ்தான் ராணுவம் தலிபான் பயங்கரவாதிகளுடன் போரிட்டு வந்தது. சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்ற போர், அமைதி ஒப்பந்தம் காரணமாக முடிவுக்கு வந்தது. அமெரிக்காவின் மத்தியஸ்தத்தினால் இரு தரப்பினருக்கும் இடையேயான போர் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அமைதி ஒப்பந்தங்களை மீறியும் அங்கு பயங்கரவாத சம்பவங்கள் அறங்கேறி வருகின்றன.
இந்நிலையில் அந்நாட்டின் கஸ்னி மாகாணத்தில் உள்ள கெலான் மாவட்டத்தில் அதிகமான மக்கள் ஒரு வீட்டில் கூடியிருந்ததாக கூறப்படுகிறது. அந்த வீட்டிற்குள் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கடந்த 15 ஆம் தேதி நடந்த வெடிவிபத்தில் அதிகாரி ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.







