மெக்சிகோ நாட்டின் அபல்கோ நகரில் இருந்து நேற்று சிறிய ரக விமானம் வேனில் பிறந்துள்ளது. இந்த விமானத்தில் 7 பேர் பயணம் செய்த நிலையில் மெக்சிகோ சிட்டியின் டொலுகா விமான நிலையம் அருகே சென்றபோது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து விமானி சான் மெடிகோ அடென்கோ பகுதியில் உள்ள தொழிற்பூங்கா அருகே விமானத்தை தரையிறக்க முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தொழிற்பூங்காவில் உள்ள கட்டிடத்தின் மீது விமானம் மோதி தீப்பற்றி விபத்துக்குள்ளானது. இந்த விமான விபத்தில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







