உத்தரப்பிரதேசத்தில் இளைஞர்கள் இரண்டு பேர் நாயை தூக்கிலிட்டு கொன்ற வீடியோ பரவியதையடுத்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்திரப்பிரதேசம் மாநிலம் காஜியாபாத்தில் லோனிக்கு அருகே எலைச்சிப்பூர் பகுதி உள்ளது. இங்குள்ள ஒரு வீட்டில் வளர்க்கப்பட்ட நாயை சங்கிலியால் தொங்கவிட்டு கழுத்தை நெரித்து இளைஞர்கள் இரண்டு பேர் சேர்ந்து கொலை செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் நேற்று முதல் வைரலாக பரவியது.
இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து காஜியாபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் விசாரணையில், 3 மாதங்களுக்கு முன்பு நாயை கொன்றதாக அதன் உரிமையாளர்கள் கூறுகின்றனர். ஆனால் நாய் நோய்வாய் பட்டதால் கொன்றாகவும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது.
ஆனால் அதற்கான எந்த ஆவணங்களும் இல்லை, அதே நேரத்தில் நாய் கொடூரமாக தூக்கிலிட்டு கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும், இது தொடர்பாக இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாயை தூக்கிலிட்டு கொலை செய்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.








