நான் அவன் இல்லை பாணியில் மாணவிகளை ஏமாற்றிய இளைஞர் – போக்சோவில் கைது

நான் அவன் இல்லை திரைப்படத்தில் வருவதுபோன்று, பள்ளி மாணவி மற்றும் அவரது தோழிகள் 3 பேரை ஏமாற்றி மிரட்டிய இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.   மதுரை மாநகர் அய்யர்பங்களாவை சேர்ந்த…

நான் அவன் இல்லை திரைப்படத்தில் வருவதுபோன்று, பள்ளி மாணவி மற்றும் அவரது தோழிகள் 3 பேரை ஏமாற்றி மிரட்டிய இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

 

மதுரை மாநகர் அய்யர்பங்களாவை சேர்ந்த சந்துரு என்ற இளைஞர்
சைக்காலஜி படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே
இருந்துவந்துள்ளார். இந்நிலையில், கல்லூரி முதலாம் ஆண்டில் பேஸ்புக் மூலமாக
மதுரையை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரிடம் நட்பை ஏற்படுத்தியுள்ளார். பின்னர் அவரை காதலிப்பதாகவும் கூறி பழகிவந்துள்ளார்.

 

மேலும் தனது குடும்ப வறுமையை கூறி பள்ளி மாணவியிடம் அவ்வப்போது வீட்டிலிருந்து தங்க நகைகளை எடுத்துவரவைத்து சிறிது சிறிதாக 13 பவுன் நகையை விற்று பணத்தை வாங்கியுள்ளார். அந்த பணத்தை வைத்து இருசக்கர வாகனம், விலையுயர்ந்த செல்போன் உள்ளிட்டவைகளை வாங்கி ஆடம்பரமாக செலவழித்து வந்துள்ளார்.

மேலும் மாணவியை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதோடு, அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளார். அத்தோடு நிறுத்தாமல் மாணவியின் தோழிகள் 3 பேருடன் பழகியுள்ளார். ஒருவருக்கொருவர் தெரியாமல் அனைவரையும் தனியாக அழைத்து சென்று ஏமாற்றியுள்ளார். அதனையும் வீடியோவாக எடுத்து வைத்து மிரட்டியுள்ளார்.

 

இந்நிலையில், இதுதொடர்பாக மாணவி ஒருவர் தல்லாகுளம் காவல்நிலையத்தில் அளித்த
புகாரின் கீழ் சந்துருவை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரின் செல்போனில் மாணவிகளுடன் தனிமையில் இருந்த 50-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களையும் பறிமுதல் செய்து அழித்தனர். மாணவிகளை ஏமாற்றி வாங்கிய இருசக்கர வாகனம், செல்போனை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.