மதுரையில் நள்ளிரவில் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை சிந்தாமணி ஓம் சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் வெல்டிங் வேலை செய்து வந்திருக்கிறார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில், வழக்கம்போல் வேலைக்கு சென்ற முத்துகுமார் இரவு வரை வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது அதே பகுதியிலுள்ள முட்புதரில் முத்துக்குமாரின் இருசக்கர வாகனம் இருப்பதை கண்டறிந்தனர். அதன் சுற்றுவட்டார பகுதியை சோதனை செய்து பார்த்தபோது முத்துக்குமார் இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை செய்தது யார், கொலைக்கான காரணம் என்ன, என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.







