வீடியோ வெளியிட்டு உயிரிழப்பு செய்துகொண்ட நபர்!

கொடைக்கானலில் மைக் செட் உரிமையாளர் ஒருவர் வீடியோ பதிவை வெளியிட்டபின் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசந்திரன். இவர் மைக் செட் நிறுவனம்…

கொடைக்கானலில் மைக் செட் உரிமையாளர் ஒருவர் வீடியோ பதிவை வெளியிட்டபின் உயிரை மாய்த்துக்
கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசந்திரன். இவர் மைக் செட் நிறுவனம் வைத்து நடத்தி வந்திருக்கிறார். இவர் சம்பவத்தன்று இரவு உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாகக்கூறி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெயசந்திரனின் குடும்பத்தினர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மாயமான ஜெயசந்திரனை பல இடங்களில் தேடி வந்தனர். கொடைக்கானல் ஏரியின் கரை பகுதியில் இவரது காலணிகள் கிடந்ததைக் கண்ட போலீசார் ஏரிக்குள் குதித்து உயிரை மாய்த்திருப்பாறோ என்று எண்ணி தீயணைப்பு துறையினரும் போலீசாரும் இனைந்து இரண்டு படகுகள் மூலம் தேடினர். சுமார் நான்கு மணி நேரத்திற்கு பிறகு ஜெயசந்திரனின் உடல் கைப்பற்றப்பட்டது. பிரேத பரிசோதனைக்காக உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.