சென்னையில் ப்ளஸ் டூ மாணவியை காதலிப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டி பணம் பறித்ததாக இளைஞர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் அசோக்நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில், கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் என்ற டிரம்ஸ் இசை கலைஞர், மாணவியுடன் 8-ஆவது படிக்கும்போது முதல் பழகி வந்ததது தெரியவந்தது.
திருமணம் செய்வதாக கூறி மாணவியை பல ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மாணவியிடம் பல முறை பணம் பெற்ற ஞானபிரகாசம், லட்சக்கணக்கில் பணம் கேட்ட போது மாணவி மறுத்துள்ளார். இதனால், பாலியல் வன்கொடுமை செய்தபோது எடுத்து வைத்திருந்த வீடியோவை காட்டி மிரட்டியுள்ளார்.
அண்மைச் செய்தி: மங்கலதேவி கண்ணகி கோயிலில் சித்திரை முழுநிலவு விழா
இதனிடையே, வீட்டில் இருந்து அதிக அளவு பணம் காணாமல் போனது குறித்து மாணவியிடம் பெற்றோர் விசாரித்தபோது ஞானப்பிரகாசம் குறித்த உண்மை வெளியாகியுள்ளது. இதையடுத்து, ஞானப்பிரகாசம் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








