முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம் செய்திகள்

காதலியை கொலை செய்து இன்ஸ்டாவில் வீடியோ பதிவிட்ட இளைஞர் கைது

மத்தியப்பிரதேசத்தில் தன்னை ஏமாற்றியதாக கூறி காதலியை கழுத்தை அறுத்து கொலை செய்த இளைஞர், அந்த வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்ட நிலையில், போலீசார் அவரை கைது செய்தனர்.

 

மத்தியப்பிரதேசம், ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் விடுதியில், கடந்த 8-ஆம் தேதி 22 வயதான இளம்பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசராணை மேற்கொண்டனர். இந்நிலையில், அப்பெண்ணின் காதலன் அபிஜித் படிதார், இளம்பெண்ணை கொலை செய்துவிட்டு அதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், இளம் பெண் கழுத்து அறுபட்ட நிலையில் துடிக்கும் வீடியோவில் அபிஜித் படிதார் ஒரு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், தாங்கள் சமூக வலைத்தளம் மூலம் பழகியதாகவும், நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் தன்னுடைய நண்பருடன் அந்த பெண் நெருக்கமாக பழகத் தொடங்கியதோடு, தன்னிடமும், தன் நண்பரிடம் இருந்தும் பணம் பெற்று கொண்டு தங்களை ஏமாற்ற முயற்சி செய்தார் என தெரிவித்துள்ளார்.

இதனால் அந்த பெண்ணை தனியார் விடுதிக்கு அழைத்து வந்து அங்கு கழுத்தை அறுத்து கொலை செய்ததாக அந்த வீடியோவில் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் நடந்து 4 நாட்கள் ஆன நிலையில், அபிஜித் படிதார் அந்த பெண்ணை கொலை செய்ததும், வாக்குமூலம் அளித்து வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து அபிஜித்தை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆசிட் கலந்த குளிர்பானத்தை அருந்திய மாணவன் மருத்துவமனையில் அனுமதி

G SaravanaKumar

இந்துக்கள் குறித்து சர்ச்சை பேச்சு – ஆ.ராசாவுக்கு டிடிவி தினகரன் கண்டனம்

Web Editor

முதல் ஆட்டத்திலேயே பாகிஸ்தானுடன் மோதும் இந்தியா – டி20 அட்டவணை வெளியீடு

G SaravanaKumar