தென்னிந்திய சினிமாவில் ரஜினிகாந்த் ரொம்ப பிடிக்கும் என தீ இவன் இசை வெளியீட்டு விழாவில் நடிகை சன்னி லியோன் கூறினார்.
தீ இவன் படத்தின் பாடல் படப்பிடிப்பு காட்சி சென்னை சாலிகிராமம் பாலு மகேந்திரா ஸ்டுடியோவில் நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகை சன்னி லியோன் உள்ளிட்ட படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.
முன்னதாக பேசிய இயக்குநர், இந்த படம் நமது கலை, கலாச்சாரம் சார்ந்த ஒரு நல்ல படமாக அமைந்துள்ளது. இந்த படத்தில் சன்னி லியோன் ஒரு பாடலில் நடிக்கிறார். கலாச்சாரமிக்க கதையில் ஒரு அழகான பாடலில் வருகிறார் சன்னி லியோன் என்றும், நிகழ்ச்சி மேடையில் கண்கலங்கிய இயக்குநர் என் மனைவியைத் தாயாகப் பார்க்கிறேன். அவர் என்னை மகனாக பார்க்கிறார். அவர் தான் என் வெற்றிக்குத் துணையாக இருக்கிறார் என்று கூறினார்.
கலாச்சாரமிக்க கதையில் என்னுடைய பங்கு எது என்று சன்னி லியோன் கேட்டதாகவும் இயக்குநர் தெரிவித்தார். கதையை கேட்டு இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் சன்னி லியோன். இரண்டு நாட்கள் கால்ஷீட் கொடுத்ததாகவும், எந்த ரிகர்சல் இல்லாமல் ஒவ்வொரு ஷாட்டையும் அழகாக முடித்து கொடுத்ததாகவும் கூறினார்.
அவரை தொடர்ந்து பேசிய நடிகை சன்னி லியோன், தீ இவன் படத்தில் வேலை செய்த அனுபவம் குறித்து, இங்கு பணியாற்றுவது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும், இரண்டாம் முறையாகச் சென்னை வந்த போதும் தமிழ்நாட்டில் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு மகிழ்ச்சியாக இருந்தது. இந்த படத்தில் பாடல் படமாக்கப்பட்ட அனுபவம் நன்றாக இருந்ததாகவும், எல்லோரும் நன்றாக ஒத்துழைப்பு கொடுத்ததாகவும் கூறினார்.
மேலும், தென்னிந்திய சினிமாவில் உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் யார் என்ற கேள்விக்கு, ரஜினிகாந்த் என்று பதில் அளித்தார். அவருடைய நடிப்பு, பேச்சு எல்லாம் ரொம்ப பிடிக்கும் என தெரிவித்தார்.







