மதுரை கோவில்பட்டியில் உள்ள எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று 26வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது,.
இந்நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.இதனை தொடர்ந்து பேசிய அவர்,
”நாம் அனைவரும் அறம் சார்ந்து நாம் வாழவேண்டும். இன்றைய சமுதாய சீர்கேட்டுக்கு காரணம் தனி மனி இல்லாததுதான். எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பும் நம் நல்வழி படுத்துவதாக இருக்க வேண்டும். இன்றைய கால இளைஞர்கள் மாணவ செல்வங்கள் செல்போனை நல்வழியில் பயன்படுத்த
வேண்டும்” என்று பேசினார்
இதில் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்லூரி
நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர்.







