திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கும்பகோணம் வந்த அமைச்சா் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உழவன் விரைவு ரயில் மூலம் சென்னையில் இருந்து கும்பகோணத்திற்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை வருகை தந்தார். அப்போது பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், துணை மேயர், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் சால்வைகள் அணிவித்து வரவேற்பு அளித்தனர்.
பின்னா் கும்பகோணத்தில் இருந்து திருவாரூருக்கு கார் மூலம் உதயநிதி ஸ்டாலின் சென்றாா்.
—கா. ரூபி







