தனியார் பேருந்து மோதி இளைஞர் பலி – வெளியான சிசிடிவி காட்சி!

தாராபுரத்தில் தனியார் பேருந்து இரு சக்கர வாகனத்தில் மோதியதில் ரூபன்சன் என்ற இளைஞர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது; மேலும் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர்…

தாராபுரத்தில் தனியார் பேருந்து இரு சக்கர வாகனத்தில் மோதியதில் ரூபன்சன் என்ற இளைஞர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது; மேலும் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அரசு ஊழியர் காலனி பகுதியை சேர்ந்த இம்மானுவேல் மகன் ரூபன்சன். இருபத்தொரு வயதான இவர், இருசக்கர வாகனத்தில் தாராபுரம் பைபாஸ் சாலையில் பொள்ளாச்சி ரோடு ரவுண்டானா அருகே சென்ற போது, சாலையில் நடந்து சென்ற என்ற பெண் மீது எதிர்பாராத விதமாக மோதிய பைக் நிலை தடுமாறியதில், ரூபன்சன் வலது புறமாக கீழே விழுந்தார். அப்போது, அவ்வழியாக, ஈரோட்டில் இருந்து பழனி நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து, ரூபன்சன் தலை மீது ஏறியதில், சம்பவ இடத்திலேயே ரூபன்சன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இவ்விபத்து குறித்து பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து, தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.