இன்ஸ்டாவில் நிக்ஜோனாஸ், பகிர்ந்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவை சேர்ந்தவர் நிக் ஜோனாஸ். பாடகரும், நடிகருமான இவர், நடிகை பிரியங்கா சோப்ராவை 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களில் திருமணம் ஜோத்பூரில் உள்ள உமைத் பவன் அரண்மனையில் மிக விமர்சையாக நடைபெற்றது.
இந்த தம்பதிக்கு 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. மால்டி மேரி என அழைக்கப்படும் அந்த குழந்தையின் புகைப்படத்தை தம்பதி இருவரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்
இந்நிலையில் நிக் ஜோனாஸ் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு லைக்குகளை அள்ளிக்குவிக்கிறது. ரசிகர்கள் மட்டுமின்றி பல்வேறு பிரபலங்களும் கமெண்ட் செய்து வருகின்றனர். முந்தைய பதிவின் போது குழந்தையின் முகம் சரியாக தெரியவில்லை என கூறப்பட்ட நிலையில், தற்போது மகளுடன் இருக்கும் தெளிவான புகைப்படத்தை நிக் ஜோனாஸ் பகிர்ந்துள்ளார்.





