முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஐசிசி டி20 கிரிக்கெட் தரவரிசை-2வது இடத்துக்கு முன்னேறிய இந்திய இளம் வீரர்!

ஐசிசி டி20 கிரிக்கெட் வீரர்கள் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 2ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2ஆவது டி20 ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி 76 ரன்களை பதிவு செய்ததுடன், ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
சிறந்த ஆட்டத்தை இவ் வெளிப்படுத்தியதால் சர்வதேச டி20 பேஸ்ட்மேன்கள் தரவரிசையில் 816 புள்ளிகள் பெற்று 2வது இடத்துக்கு முன்னேறினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

முதலிடத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம் 818 புள்ளிகளுடன் நீடிக்கிறார். மூன்றாவது இடத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது ரிஸ்வான் இடம் பிடித்துள்ளார்.
பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய பேஸ்ட்மேன் சூர்யகுமார் யாதவ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பட்டியலில் 14வது இடத்தில் மற்றொரு இந்திய இளம் வீரர் இஷான் கிஷன் உள்ளார்.
16ஆவது இடத்தில் இந்தியக் கேப்டன் ரோகித் சர்மா இருக்கிறார். டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் புவனேஸ்வர் குமார் 653 புள்ளிகளுடன் 8வது இடத்தில் நீடிக்கிறார்.

முதலிடத்தில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் நீடிக்கிறார்.
டி20 ஆல்-ரவுண்டர் தரவரிசை பட்டியலில் டாப் 10 பட்டியலில் இந்திய வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை. 13 வது இடத்தில் இந்திய வீரர் ஹார்திக் பாண்டியா உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மாணவர்களின் மருத்துவ படிப்பு: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

Halley Karthik

கோயில்களில் சாமி தரிசனம் செய்ய தடை!

EZHILARASAN D

’அண்ணாத்த’ மறக்க முடியாத படம் :ரஜினிகாந்த்

EZHILARASAN D