இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் கட்டாக்கில் நடந்த முதலாவது போட்டியில் இந்தியா 101 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசண்டிகாரில் நடந்த 2-வது போட்டியில் தென் ஆப்பிரிக்கா 51 ரன் வித்தியாசத்தில் வென்றது. இதனை தொடர்ந்து தர்மசாலாவில் நடந்த 3-வது ஆட்டத்தில் இந்திய அணி மீண்டும் வெற்றி பெற்றது. லக்னோவில் நடக்க இருந்த 4-வது 20 ஓவர் போட்டி கடுமையான பனிமூட்டத்தால் ‘டாஸ்’ கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இதனால் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதனை தொடர்ந்து இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையேயான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி அகமதாபாதில் இன்று (டிசம்பர் 19) நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் அய்டன் மார்க்ரம் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்ய உள்ளது.
அணி விவரம்
இந்தியா: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே. ஜிதேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், வருண் சகரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங்.
தென் ஆப்பிரிக்கா: குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஐடன் மார்க்ரம் (கேப்டன்). டெவால்ட் ப்ரீவிஸ், டேவிட் மில்லர். டொனோவன் பெரீரா, ஜார்ஜ் லிண்டே, மார்கோ ஜான்சன், கார்பின் போஷ், லுங்கி நிகிடி, ஒட்னீல் பார்ட்மேன்







