தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “கருணைக்கடலே கந்தா போற்றி! பக்தியும் பொறுமையும் துணையாக, அன்பும் அறமும் வழிகாட்ட, இந்த தைப்பூசத் திருநாளில் தாய் மடியில் தழுவும் பிள்ளையென எங்களை காத்து சோதனைகளில் துணையாய் நின்று, வெற்றியின் வழி காட்டி, உன் அருளால் எங்கள் வாழ்வெங்கும் நம்பிக்கை, ஆனந்தம் நிரம்பச் செய்ய உன்னை மனம் உருகி வேண்டிக் கொள்கிறேன்.
நம் தமிழகத்தை இருள் சூழ்ந்திருக்கும் நிலையில் திமுக ஆட்சியை அகற்ற அருள் புரிய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். மேலும் நம் தமிழர்களின் வாழ்நாள் கோரிக்கையான தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த ஆட்சியில் 2021 ஆம் ஆண்டு நிறைவேற்றிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அஇஅதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்த நேரத்தில் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றிவேல்..! வீரவேல்..! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







