இணைய வழி பத்திரப்பதிவு திட்டம்: முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார்!

முதல் மனை விற்பனை மற்றும் வீடு விற்பனை ஆவணங்களைப் இணையவழியில் மட்டுமே கட்டாயமாகப் பதிவுசெய்யும் நடைமுறையைத் முதலமைச்சர் விஜய் தொடங்கிவைத்தார்

சென்னை தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில், தமிழ்நாட்டில் உள்ள மனைப்பிரிவில் முதல் மனை விற்பனை மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்பில் முதல் வீடு விற்பனை ஆவணங்களைப் பதிவுத்துறையில் இணையவழியில் வருகையில்லா ஆவணப்பதிவு (Presenceless Registration) மூலம் மட்டுமே கட்டாயமாகப் பதிவுசெய்யும் நடைமுறையைத் முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கிவைத்தார்.

இதன்மூலம், இணையவழியில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை சார்பதிவாளர்கள் 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும். பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் சார்பதிவாளர் டிஜிட்டல் கையொப்பமிட்டு, ஆவணப் பதிவிற்காக உருவாக்கப்பட்ட பயனர் உள்நுழைவில் அவை கிடைக்கச் செய்யப்படும். பயனர் உள்நுழைவில் கிடைக்கும் பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை 60 நாட்களுக்குள் தேவையான எண்ணிக்கையில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் மென்பொருள் வசதி செய்யப்படும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் நடைமுறைக்கு வர உள்ளது.

இந்நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன், வணிகவரி, பதிவுத்துறை மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் குமரகுருபரன், பதிவுத்துறைத் தலைவர் அருண் சுந்தர் தயாளன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.